search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபல ரவுடி"

    • பல்வேறு இடங்களில் கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் எல்லையில் புதுச்சேரி மாநிலம் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கடலூர் மாவட்ட எல்லை பகுதிகளில் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட போலீசாரும், புதுச்சேரி மாநில போலீசாரும் ஒன்றிணைந்து கடலூர் மாவட்ட மற்றும் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிகளில் அதிரடியாக சோதனை ஈடுபட்டு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களின் வீடுகளுக்கு சென்று கடும் எச்சரிக்கையும் விடுத்து வந்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதையொட்டி கடலூர் மாவட்ட போலீசார் குற்ற சம்பவங்கள், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை பகுதியில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதுக்கடை சுடுகாடு பகுதியில் ஒரு கும்பல் இருந்ததை பார்த்த போலீசார் அவர்களைப் பிடிக்க சென்றனர்.


    அப்போது ஒரு நபர் தப்பி ஓடிவிட்டார். மீதமுள்ள 5 நபர்களை சுற்றி வளைத்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 25), கவியரசன் (30), புதுக்கடை சேர்ந்த வேல்முருகன் (27), சந்தோஷ் (21), கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 32) என்பது தெரியவந்தது.

    மேலும், தப்பியோடியது கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி தாடி அய்யனார் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து கத்தி, 2 மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், இவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளை அடிக்க சதி திட்டம் திட்டியதாக தெரியவந்தது. இது மட்டுமன்றி இவர்கள் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதனை தொடர்ந்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் பிரபல ரவுடி தாடி அய்யனாரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரவு 8 மணி அளவில் கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டி ருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள நாச்சியார் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 41). பிரபல ரவுடி லிங்கத்தின் உறவினர் ஆவார். இவரும் பிரபல ரவுடி லிங்கத்தின் மகனுமான சுஜித் (25) என்பவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை ஜெகதீஷ் என்பவர் ஓட்டிச்சென்றார். இவர்களது மோட்டார் சைக்கிள் பழத்தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த டெம்போ ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டி ருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    இதில் ஜெகதீஷ் மேல் சிகிச்கைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார். பிரபல ரவுடி லிங்கத்தின் மகன் சுஜித்துக்கு கால் முறிவு ஏற்பட்டதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஜெகதீசின் உடல் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குற்ற செயல்களை செய்து விட்டு சரவணக்குமார் தப்பித்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார்.
    • பதுங்கி இருந்த சரவணக்குமாரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்தவர் சின்னக்குண்டு என்ற சரவணக்குமார் (வயது 36).

    பிரபல ரவுடியான இவர் மீது தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையம் மற்றும் பல்வேறு மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் உள்பட 17-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    ஆனால் குற்ற செயல்களை செய்து விட்டு சரவணக்குமார் தப்பித்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார்.

    இதையடுத்து சரவணக்குமாரை பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் மருத்துவ கல்லூரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த சரவணக்குமாரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், இக்பாலின் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.
    • இக்பாலின் 4 மகன்கள் மற்றும் சகோதரர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிறையில் உள்ளனர்.

    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இக்பால்(வயது 60). இவர் மீது சட்டவிரோத சுரங்கம், நில ஆக்கிரமிப்பு, பெண்களை துஷ்பிரயோகம் செய்தல், ஏமாற்றுதல், அரசு சொத்துகளை அபகரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. ஆவார். அவரது பதவி காலம் முடிந்ததும் அவர் தனது தம்பி மஹ்மூத் அலியை எம்.எல்.சி. ஆக்கினார். பகுஜன் சமாஜ் ஆட்சியின்போது இக்பாலுக்கு அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், இக்பாலின் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

    இதையடுத்து இக்பால் மற்றும் அவரது மகன்கள் அப்துல்வாஜித், ஜாவேத், முகமது அப்சல், அலிஷான் மற்றும் சகோதரர் ஆகியோர் மீது சட்டவிரோத சுரங்கம், நில அபகரிப்பு உள்ளிட்ட 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாநில போலீசார் மற்றும்சி.பி.ஐ., அமலாக்கத்துறை தனித்தனியே இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறது. இக்பாலின் 4 மகன்கள் மற்றும் சகோதரர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிறையில் உள்ளனர். தற்போது இக்பால் தலைமறைவாக உள்ளார்.

    இக்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க, அவர்கள்சது பாஸ்போட்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. அவர்கள் மீதான வழக்குகள் நடந்து வருகின்றன. இதனிடையே இக்பாலுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள முறைகேடான சொத்துக்கள் கண்டறியப்பட்டன. அவற்றை தற்போது உத்தரபிரதேச காவல்துறை முடக்கி உள்ளது. சமூக விரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 14 (1) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில், சஹாரன்பூரில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலமும், லக்னோவின் கோமதி நகர் பகுதியில் உள்ள 7 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவும், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 80,000 சதுர மீட்டர் நிலமும் அடங்கும்.

    கிரேட்டர் நொய்டாவில் இக்பாலின் கூட்டாளிகள் டவுன்ஷிப்பை உருவாக்க திட்டமிட்டனர். இதற்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கினார், அதுவும் முடக்கப்பட்டு உள்ளது. மேலும் இக்பாலுக்குச் சொந்தமான மேலும் பல முறைகேடான சொத்துக்களை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருவதாகவும், அதன்படி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு பறிமுதல் செய்ததுடன், கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தனர்.
    • சிறைசாலை வளாகத்தில் செல்போன் மற்றும் பேட்டரி , சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைத்தது பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் என்பது தெரியவந்து.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான சிறை காவலர்கள் மத்திய சிறை வளாகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிச் சிறை எண் 1 பகுதி வளாக கழிவறை முன்பு உள்ள செடி அருகில் மண்ணை தோண்டி பார்த்ததற்கான அறிகுறி தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்த சிறை காவலர்கள் மண்ணை தோண்டி பார்த்தபோது, அங்கு 1 செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறை காவலர்கள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் 2 பேட்டரிகள், சிம் கார்டு பறிமுதல் செய்ததுடன், கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறைசாலை வளாகத்தில் செல்போன் மற்றும் பேட்டரி , சிம் கார்டு ஆகியவற்றை புதைத்து வைத்தது பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் என்பது தெரியவந்து. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயிலர் மணிகண்டனுக்கும், பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரனுக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் சிறைசாலையில் பணிபுரிந்து வந்த வார்டன் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் ஜெயிலர் கடந்த ஆண்டு மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி அவரது குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சித்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தூண்டுகோலாக பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

    • முக்கிய குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை
    • இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார்கள்

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி அருகே மாதவாலயம் அனந்த பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36), பிரபல ரவுடி.

    இவர், கடந்த 16-ந்தேதி ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். கொலை யாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர்.

    இந்த நிலையில் ராஜ்குமா ருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே சூப் கடை ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்தி ருப்பது தெரிய வந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக புது குடியிருப்பைச் சேர்ந்த பிரவீன் (23), அவரது நண்பர் நாகர்கோவிலை சேர்ந்த ராம சித்தார்த் (26)ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய வர்கள் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீ சார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் யாரும் சிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நாகர்கோவில் ராமன் புதுரை சேர்ந்த ஜெபின் (26) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட ஜெபினை ஆரல்வாய் மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசா ரணை நடத்தினார்கள்.

    அப்போது தனது நண்பர் அழைத்ததால் அவருடன் சென்றதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்ட ஜெபினை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். முக்கிய குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப் பட்டு வருகிறது.

    இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்துள்ளார். வீட்டில் கேட்டபோது வண்டியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார்.
    • சிறிது நேரம் கழித்து பாட்டி அவரை எழுப்பும்போது சண்முகம் இறந்த நிலையில் இருந்துள்ளார்.

    கடலூர்:

    சிதம்பரம் கோவிந்தசாமி தெரு காரியபெருமாள் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகி என்கிற சண்முகம். இவர் கோவில் சிலை செய்யும் நபர். நேற்று முன்தினம் வெளியில் சென்றவர் நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்துள்ளார். வீட்டில் கேட்டபோது வண்டியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். மறுநாள் காலை மருத்துவ மனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் பணம் வாங்கிக்கொண்டு தனது பாட்டி வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து பாட்டி அவரை எழுப்பும்போது சண்முகம் இறந்த நிலையில் இருந்துள்ளார். அவரது தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மர்மமான முறையில் இறந்த சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் அவரது பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    • திருச்சியில் முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது
    • கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மிட்டாய் பாபு மீது 18 வழக்குகளும், ஜான் எமிலி கிறிஸ்டோபர் மீது 5 வழக்குகளும் அன்சாரி மீது ஐந்து வழக்குகளும், சந்தோஷ் குமார் மீது 15 வழக்குகளும் நிலுவையில் உள்ளது

    திருச்சி:

    திருச்சி முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). பிரபல ரவுடியான இவர் மீதுபல வழக்குகள் உள்ளது. இவருக்கும் வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்த மிட்டாய் பாபு (32), உப்பு பாறை பிள்ளைமா நகர் பகுதியை சேர்ந்த டக்ளஸ் (29) உள்ளிட்ட இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்று முன் தினம் இரவு மணிகண்டன் தன்னுடைய மனைவிக்கு இரவு உணவு வாங்குவதற்காக கடைக்குச் சென்ற போது அங்கு வந்த மிட்டாய் பாபு, டக்ளஸ் உள்ளிட்ட ஐந்து பேர் மணிகண்டனை வழிபறித்து கடுமையான தாக்கி அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து மணிகண்டன் பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மிட்டாய் பாபு, டக்ளஸ் அரியமங்கலம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கவியரசு (23), காந்தி மார்க்கெட் எடத்தெரு பிள்ளைமாநகரை சேர்ந்த ஜான் எமிலி கிறிஸ்டோபர் (23), அன்சாரி (23), வடசேரி பென்சனர் தெருவை சேர்ந்த சந்தோஷ் குமார் (21) உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மிட்டாய் பாபு மீது ஏற்கனவே 18 வழக்குகளும், ஜான் எமிலி கிறிஸ்டோபர் மீது ஐந்து வழக்குகளும் அன்சாரி மீது ஐந்து வழக்குகளும், சந்தோஷ் குமார் மீது 15 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குடிபோதையில் என்னை அடித்ததால் கத்தியால் குத்தி கொன்றேன்
    • கைதான வாலிபர் வாக்குமூலம்

    கன்னியாகுமரி: 

    நாகர்கோவில் அருகே சுங்கான் கடை பகுதியில் நான்கு வழி சாலை பணி நடந்து வருகிறது.

    அந்த பகுதியில் நேற்று முன்தினம் குடிபோதையில் வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குருந்தன்கோடு முக்கலம்பாட்டையைச் சேர்ந்த அசோக் மற்றும் அஜின்ஜோஸ் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் களியக்காவிளை ஆர்.சி. தெருவை சேர்ந்த ரீகன் (வயது 35) என்பது தெரிய வந்தது. ரீகன் மீது ஏற்கனவே கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த வாரம் தான் ஜெயிலில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் தான் அவர் கொலை செய் யப்பட்டுள்ளார். கொலைக் கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இது குறித்து கைது செய்யப்பட்ட அசோக், அஜின் ஜோஸ் இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப் போது அஜின் ஜோஸ் கூறிய தாவது:-

    எனக்கு அடிக்கடி மிரட்டல்கள் வந்ததையடுத்து எனது பாதுகாப்பிற்காக ஆன்லைனில் கத்தி ஒன்றை வாங்கி பாதுகாப்பிற்காக வைத்திருந்தேன். கொலை செய்யப்பட்ட ரீகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து வந்து என்னை தொடர்பு கொண்டார்.

    ஜெயிலில் இருந்த எனது நண்பர் ஒருவர் ரீகனிடம் என்னை பார்க்குமாறு கூறியதாக கூறினார். இதனால் ரீகனை சுங்கான்கடைக்கு வருமாறு கூறிேனன். அவர் அங்கு வந்தார். நாங்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தோம். அப்போது எங்களுக்குள் இடையே திடீரென வாய்த் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ரீகன், என்னிடம் நீ என்ன பெரிய ரவுடியா? உன் மீது 2 வழக்குதான் உள்ளது. எனக்கு 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என்று கூறி என்னை சரமாரியாக தாக்கினார் . இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நான் எனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை எடுத்து போலீசார் அஜின்ஜோஸ், அசோக் இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். பின்னர் இருவரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    ×